திருச்சி

புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

31st Jul 2019 09:52 AM

ADVERTISEMENT

திருச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவை கண்டித்து   நடைபெற்ற மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது,  தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில், திருச்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 
கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மைதீன் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில்,  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். ரபீக் அந்தோணிராஜ், கிருஷ்ணமூர்த்தி, பீர்ஷா, சதாம் , ஷேக் அப்துல்லா, ஜுபேர் அஹமத், பஜார் பக்ருதீன் மற்றும் மாவட்ட, பகுதி, கிளைக் கழக  நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT