திருச்சி

தமிழ்ச் சான்றோருக்கு மாமன்னன் கரிகாலன் விருது

31st Jul 2019 09:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வரும் தமிழ்ச் சான்றோர்களுக்கு மாமன்னன் கரிகாலன் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த எழுத்தாளருமான மழபாடி ராஜாராம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் வை. ஜவஹர் ஆறுமுகம் வரவேற்றார்.
 விழாவில், திருக்குறள் சு. முருகானந்தம், கவிஞர் வீ. கோவிந்தசாமி, அக்னி குஞ்சு இதழின் ஆசிரியர் சின்னை வெங்கட்ராமன், புலவர் பழ. தமிழாளன் ஆகியோரது தமிழ்ப்பணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாமன்னர் கரிகாலன் எனும் விருது வழங்கப்பட்டது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் வா.மு. சேதுராமன், நால்வருக்கும் விருதுகளை வழங்கி, அவர்களது தமிழ்ப் பணிகளைப் பாராட்டி பேசினார். கிழக்குவாசல் உதயம் மாத இதழ் ஆசிரியர் உத்தமசோழன், சங்கப் பொருளாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விருது பெற்ற நால்வரும் ஏற்புரையாற்றினர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT