பல்வேறுகோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனைத்துப் பணியாளர்களுக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும்.
அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் குடிநீர் வழங்க வேண்டும், சாக்கடைகளைத்
தூய்மைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு சங்கத்தின் வைரிசெட்டிப்பாளையம் கிளைச் செயலர் பி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் டி. முத்துக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதைத் தொடர்ந்து, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுக்குப் பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது.