திருச்சி

தாயை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மகன் கைது

30th Jul 2019 09:57 AM

ADVERTISEMENT

முசிறி அருகே மது அருந்துவதற்குப் பணம் தராததால், தாயை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மகனை போலீஸார் திங்கள்கிழமை  கைது செய்தனர்.
 முசிறி அருகிலுள்ள ஏவூர் குடித்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.  இவரது மனைவி தமிழரசி (57).மகன் கண்ணதாசன் (32). அப்பகுதியிலுள்ள தாளடி கருப்பு கோயிலில் சீனிவாசன் வேலை செய்து வருகிறார். திங்கள்கிழமை  சீனிவாசன் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், மாலையில்  தாய் தமிழரசியிடம் மது அருந்துவதற்குப் பணம் தருமாறு கண்ணதாசன் கேட்டு தகராறு செய்தாராம். இதனால் அச்சமடைந்த தமிழரசி, கருப்பு கோயிலுக்குச் செல்வதற்காக ஓடி வந்தார். அப்போது கண்ணதாசன் அவரை கல்லால் தாக்கி,   மண்வெட்டியால் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தமிழரசியை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்  ஏகெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து, கண்ணதாசனைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT