திருச்சி

திருவானைக்காவலில் சாதா புறா பந்தய போட்டி

29th Jul 2019 10:50 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் சாதா புறா பந்தய போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 24 ஜோடி சாதா புறாக்கள் கலந்து கொண்டன. இதில் 6 ஜோடி சாதா புறாக்கள் வெற்றி பெற்றன.
அந்த புறாக்களுக்கான இறுதிச் சுற்று போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. 8 மணி நேரம் வானத்தில் வட்டமிட்டு நடுவர்கள் கூறும் இடத்தில் புறாக்கள் அமர வேண்டும். திருவானைக்காவல் நடுக்கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த யோகராஜ் புறா முதல் பரிசையும், பெரியசாமியின் புறா 2ஆம் பரிசையும் பெற்றன. மற்ற புறாக்கள் 3 மணி நேரத்திலியே தரை இறங்கிவிட்டன. போட்டியில் வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT