திருச்சி

சிறப்பு உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

29th Jul 2019 10:50 AM

ADVERTISEMENT

திருச்சி, உறையூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் அழகுமுத்து. இவர், சனிக்கிழமை இரவு உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயக்குமார்(38) என்பவரை வழிமறித்து ஆவணங்களை கேட்டுள்ளனர். அதை தர மறுத்த ஜெயக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அழகுமுத்து அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை உறையூர் போலீஸார் கைது செய்தனர். 
இளம் பெண்ணிடம் தகராறு: திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகள் சமீராபானு(20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது(28) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெறவிருந்தது. சில காரணங்களால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷேக்முகமது அப்பகுதியில் தனியாக நடந்து சென்ற சமீராபானுவிடம் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து ஷேக்முகமதுவை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT