திருச்சியில் பங்கு நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொழிலதிபர் மீது மாநகர காவல்துறை ஆணையரிடம் தம்பதியினர் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.
திருச்சி குழுமணியைச் சேர்ந்த ராஜா அளித்த மனுவில் கூறியிருப்பது: நான் தென்னூர் பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் போது தொழில் அதிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவர், தான் பங்கு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் முதலீடு செய்தேன். ரூ.14 லட்சம் பெற்றுக் கொண்டு ரசீது அளித்தார்.
முதல் மாத கமிஷன் தொகையை பதிவு செலவிற்கு எடுத்து கொண்டதாகவும், அதன் பிறகு அடுத்த மாதங்களில் கமிஷன் தரப்படும் என்றார். ஆனால் நீண்ட நாள்களாகியும் பணம் தரவில்லை.
இதுபோல பல பேர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.