திருச்சி

சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் பயிற்சி முகாம்

27th Jul 2019 09:14 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.முரளிசங்கர் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஆர்.நந்தினி,  லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி ரவிந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
பயிற்சி முகாமில் திருச்சி நகரம், மணப்பாறை, லால்குடி, துறையூர் மற்றும் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 
சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் நீதித்துறையினருக்கு உறுதுணையாக செயலாற்றுவது, பொதுமக்களுக்கும் நீதித்துறைக்கும் இணைப்பு பாலமாக இருந்து சமூக பணிகளை நிறைவேற்றுவது, கிராமப்புற மக்களுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் அமைப்பது, சட்ட உதவி தேவையான நபர்களுக்கு சட்ட உதவி கிடைத்திட பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT