திருச்சி

படைக்கலன் ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

22nd Jul 2019 09:38 AM

ADVERTISEMENT

மீண்டும் பணி வழங்கக்கோரி, வேலையிழப்பு செய்யப்பட்ட  பாதுகாப்பு படைக்கலன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
திருச்சி அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலையில் 150-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நிகழாண்டில்  ஆட்களைத் தேர்வு செய்ய புதிய நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிறுவனம், ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் புதிய ஆட்களை தேர்வு செய்து பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய ஒப்பந்தத்
தொழிலாளர்கள் 2 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவெறும்பூர் வட்டாட்சியர் ரபிக் அகமது தலைமையில் பேச்சுவார்த்தை  நடந்தது. இந்நிலையில் சங்கத்தின் பொதுச்செயலர் பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT