திருச்சி

நடிகர் சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி

22nd Jul 2019 09:38 AM

ADVERTISEMENT

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சியில், மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி மன்றம், சிவாஜி பிலிம் கிளப் ஆகியன சார்பில், தென்னூர் வண்டி ஸ்டாண்ட் பகுதியில், சிவாஜி நினைவுதின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவாஜி பிலிம் கிளப் தலைவர் அண்ணா துரை தலைமை வகித்தார்.  ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் சிவாஜி மணி(செயலாளர்), ஆல்பர்ட் பாத்திமா (பொருளாளர்), மரக்கடை கிருஷ்ணமூர்த்தி (இணைச் செயலாளர்) ராஜசேகரன், அசோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சிவாஜியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து  பள்ளி சிறார்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும்  வழங்கப்பட்டன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT