திருச்சி

சூதாடிய 20 பேர் கைது; ரூ.1.40 லட்சம் பறிமுதல்  

22nd Jul 2019 09:40 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் சூதாடிய 20 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி - வளநாடு பகுதியில் சிலர் சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்ரோ, காவல் ஆய்வாளர்கள் அனுஷா மனோகரி, முத்துகுமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை நள்ளிரவு வளநாடு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி - தாதகவுண்டம்பட்டி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னப்பன் தலைமையிலான 20 பேரைப் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும்,  அவர்களிடமிருந்து ரூ. 1.40 லட்சம் ரொக்கம் மற்றும் 11 இரு சக்கர வாகனங்கள் ஆகியவர்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.  கைதான 20 பேரையும் மணப்பாறை குற்றவியல் நடுவர் முன் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஜர்படுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT