திருச்சி

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

16th Jul 2019 09:07 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் தண்டவாளப்பகுதியில் திங்கள் கிழமை இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. 
மணப்பாறை அடுத்த சின்னசமுத்திரம் பகுதியில் ரயில் தண்டவாளப் பகுதியில் திங்கள்கிழமை இளைஞர் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக மணப்பாறை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
போலீஸார் விசாரணையில், ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சங்கர் (22) பாண்டிச்சேரியில் வெல்டராகப் பணிபுரிந்து வந்ததும் ஞாயிற்றுக்கிழமை பாண்டிச்சேரிக்கு ரயிலில் செல்லும்போது, படியில் அமர்ந்து பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருச்சி ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT