உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கக் கோரி, பெல் நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டிற்கான உற்பத்தி ஊக்கத் தொகையை பெல் நிர்வாகம் வழங்க வலியுறுத்தி திருச்சி பெல் நிறுவன அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் குழு திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. அதன்படி திங்கள்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் பிரதான நுழைவு வாயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இதில் தொழிங்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.