திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்து கோயில்களில் வசூலிக்கப்படும் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்து அறநிலையத் துறையை இந்து ஆலய கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் முன் மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் தண்டபாணி, மாவட்ட பேச்சாளர் முத்துக்குமார், ஒன்றியச் செயலர் வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கோட்ட பொறுப்பாளர் ராம. சிவக்குமார், மணப்பாறை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆலய சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அவற்றை அரசு உடனடியாக மீட்க வலியுறுத்தினார். ஒன்றியச் செயலர் நல்லுச்சாமி நன்றி கூறினார்.