திருச்சி

தரிசனக் கட்டணம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

15th Jul 2019 08:37 AM

ADVERTISEMENT

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
திருச்சி மாநகர் அரியமங்கலம் கோட்டம் சார்பில் தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொதுச் செயலர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் முருகானந்தம், திருச்சி கோட்டச் செயலர் ராம. சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொறுப்பாளர்கள் பாலமுருகன், ஆறுமுகம், போராஜன், மனோஜ்குமார், ஆறுமுகம் இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த மண்டல பொறுப்பாளர்கள் கங்கா, பிரபு, கதிரவன், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT