திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் போலம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜேஷ்குமார் (24). இவர் 3 நாள்களாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். தகவலின்பேரில் வந்த போலீஸார் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வளநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.