திருச்சி

மணல் கொள்ளை: அதிமுக பிரமுகர் உள்பட 9 பேர் கைது

12th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

திருச்சி கோரையாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உள்பட 9  பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
திருச்சி மேலபஞ்சப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான் போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியபோது லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பல் தப்பியோட முயற்சித்தது. அவர்களை மடக்கி பிடித்த போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அவர்கள் கள்ளிக்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலசுப்ரமணியன் என்பதும், இவரது தலைமையில் மணல் மூக்கன்(37), பெரியசாமி(30), சசிக்குமார்(19), பாலகிருஷ்ணன்(25), கன்னியப்பன்(38), ராஜ்குமார்(22), செல்வகுமார்(33), கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மணல் அள்ளியதும் தெரிய வந்தது. மேலும் மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 2 லாரி, ஒரு பொக்லைனை பறிமுதல் செய்தனர். எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்கு பதிந்து 9 பேரையும் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT