திருச்சி

வேலைவாய்ப்பு முகாமில் 311 பேருக்கு நியமன ஆணை

6th Jul 2019 07:27 AM

ADVERTISEMENT

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 311 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்து. இதில், ஆண்கள், பெண்கள் என 1,192 பேர் பங்கேற்றனர்.  19 நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்தனர். 
முகாமில் தேர்வு செய்யப்பட்ட311 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசியது:
வேலைதேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் ஒரே இடத்தில் குழுமச் செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்த தர சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த வகையில் 512 இளைஞர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாது அயல்நாட்டு வேலைவாய்ப்பு பணி கோரி 32 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இந்த விண்ணப்பங்கள் அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, தகுதியான நபர்களை வெளிநாடுகளில் பணிக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த முகாமில், மகளிர் திட்ட அலுவலர் சரவணன், மண்டல வேலைவாய்ப்பு இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநர் வெ. சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT