தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக விபத்து வழக்குகளுக்கு சமரசத்தீர்வு காண
ஜூலை 13-இல் மெகா லோக் அதாலத் நடைபெறவுள்ளது.
இதில், கும்பகோணம் கோட்ட அரசுப்போக்குவரத்துக் கழகம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் தவறாமல் கலந்துகொண்டு தீர்வு பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு கும்பகோணம் மண்டலத்தை 0435-2403724, 25, 26, 90432-38312, 86675-90214, திருச்சி மண்டலத்தை- 0431- 2415551, 52, 53, 54, 94878-98057, காரைக்குடி மண்டலத்தை- 04565- 234125, 26, 94878-98095, புதுக்கோட்டை மண்டலத்தை- 04322- 266111, 94435-76675, 78268-52376 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.