திருச்சி

அம்மா திட்ட முகாமில் 35 மனுக்களுக்குத் தீர்வு

6th Jul 2019 07:28 AM

ADVERTISEMENT

துறையூர் வட்டம், வைரிச்செட்டிப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 35 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சிவசங்கரன் முகாமுக்குத் தலைமை வகித்தார். உப்பிலியபுரம் மண்டலத் துணை வட்டாட்சியர் சக்திவேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உப்பிலியபுரம் ஒன்றிய வேளாண், தோட்டக்கலை, சமூக நலத் துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்று, தங்கள்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பேசினர்.  முகாமில் பெறப்பட்ட 150 மனுக்களில் 35-க்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள்மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக  வருவாய் ஆய்வாளர் ராதா வரவேற்றார். நிறைவில் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT