திருச்சி

ஸ்ரீரங்கம் பேருந்துகளை  திருவானைக்கா வழியே இயக்கக் கோரிக்கை

4th Jul 2019 09:02 AM

ADVERTISEMENT

புதிதாக கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டு க்கு வந்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் வழியே சென்று வரும் பேருந்துகளை திருவானைக்கா வழியே மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவானைக்காவல் பகுதியில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் திருவானைக்கா பகுதி மக்கள் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால்  இரண்டு பேருந்துகள் மாறிச் செல்லும் சூழல் தொடர்கிறது. பாலத்தின் வழியே மீண்டும் பழையபடி பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT