திருச்சி

ஸ்ரீரங்கம் பகுதிகளில் இனி  காலை நேரம் மட்டும் குடிநீர்

4th Jul 2019 09:03 AM

ADVERTISEMENT

மாநகராட்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 1 முதல் 6 வார்டுகள் வரையில் வியாழக்கிழமை முதல் காலை நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அலுவலக செய்திக்குறிப்பு ; திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில்  நாள்தோறும்  காலை மற்றும் மாலை நேரங்களில் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  
தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் சிக்கனத்தின் அவசியம் கருதி, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில் வார்டு எண்1 முதல் 6 வரை உள்ள பகுதிகளுக்கு,  ஜூலை 4 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் காலை நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படும். 
மாலை நேர குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனால் ஏற்படும்  சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT