திருச்சி

லாரி ஓட்டுநர் மர்மச் சாவு

4th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே ஆந்திரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மர்மான முறையில் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தார்.  
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டி வெங்கட சுப்ராவ்(40). லாரி ஓட்டுநரான இவர் கேரளத்திலிருந்து அரியலூருக்கு மின்சாதன பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்தார். திருச்சி- மதுரை சாலையில் சேதுராப்பட்டி பிரிவு சாலையில் லாரியை நிறுத்தி விட்டு  அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லையாம். இந்நிலையில் சாலையோரத்தில் மர்மான முறையில் வெங்கட சுப்ராவ் உயிரிழந்து கிடந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் மணிகண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT