திருச்சி

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்ற மாணவி பலி

4th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே உள்ள எஸ்.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் பபிதா(19). இவர், பேட்டைவாய்த்தலை பகுதியில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி மையத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  
ஜூன் 30ஆம் தேதி இவர் தென்னந்தோப்பில் நடந்து சென்ற போது பாம்பு கடித்ததில் உயிருக்கு போராடினார். இதை கண்ட சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT