திருச்சி

ஜூலை 9-இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

4th Jul 2019 09:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 9 ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருச்சி மாவட்ட முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 9ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக ஆட்சியரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT