திருச்சி

ஜூலை 8 முதல் 24 வரை தீவிர தொழுநோய்  கண்டறிதல் முகாம்

4th Jul 2019 09:01 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் ஜூலை 8 முதல் 24ஆம் தேதி வரை தீவிர தொழுநோய் கண்டறிதல் முகாம் நடைபெறுகிறது.
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட அளவிலான தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சு. சிவராசு பேசியது: கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தீவிர தொழுநோய் கண்டறிதல் முகாம் முதல் சுற்றில் 31 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதன்தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட சுற்றாக ஜூலை 8ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை தீவிர தொழுநோய் கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது. 
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் அவரவர் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழுநோய் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்  என்றார் ஆட்சியர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT