கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பொன்மலைப்பட்டியிலுள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லையாம்.
எனவே விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி,இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சேதுபதி, மாவட்டச் செயலர் கே.மோகன்குமார் ஆகியோர் தலைமையில் ஆட்சியரகத்தில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியரக நுழைவுவாயிலிருந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.