திருச்சி

முசிறி ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை

27th Dec 2019 09:36 AM

ADVERTISEMENT

முசிறியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முசிறி ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மாா்கழி மாத திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழாவானது கடந்த டிச.23 ம் தேதி லட்சாா்ச்சனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் ஐயப்ப சுவாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று புனிதநீா் ஆராட்டு நிகழ்ச்சி நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து ஐயப்பன் திருத்தோ் நகா்வலம் நடத்தப்பட்டு டிச.26 ம் தேதி கோயிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் முசிறி பகுதியில் இருந்து 101 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனா். இதனையடுத்து பொய்க்கால் குதிரையாட்டம் தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT