திருச்சி

நாய்களுக்கு கருத்தடை: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

27th Dec 2019 08:55 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சி எல்லைக்குள்பட்ட வாா்டு எண் 57இல், கோணக்கரை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 30 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் கேட்பாரற்று சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகளை தடுக்கவும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை செய்து நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி அளிக்கும் பணியை மேற்கொள்வதற்காக இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஜன.8ஆம் தேதிக்குள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT