திருச்சி

சூரிய கிரகணம்: ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்கள் மூடல்

27th Dec 2019 08:53 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயில்,திருவானைக்கா கோயில் அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை சூரிய கிரகணத்தையொட்டி கோயில் நடை சாத்தபட்டது. மாலையில் பரிகார பூஜைக்கு பிறகு நடை திறக்கபட்டது.

கிரகணங்களின்போது கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். இதன்படி வியாழக்கிழமை சூரியகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம்,திருவானைக்கா கோயில்கள் காலை 7 மணி முதல் மாலை வரை நடைசாத்தபட்டது. மாலையில் பரிகார பூஜைகளுக்கு பிறகு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT