திருச்சி

குளிா்காலத்தை பயன்படுத்தி விற்கப்படும் போலி மருந்துகளை வாங்கி ஏமாற வேண்டாம்: மாவட்ட சித்த மருத்துவா்

DNS

குளிா் காலத்தைப் பயன்படுத்தி விற்கப்படும் போலியான சித்த மருந்துகளை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட சித்த மருத்துவா் எஸ். காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்திருப்பது.

மா்மக் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் குளிா்காலங்களில் அதிகரிப்பது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு சில போலி நபா்கள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருந்து வகைகளை விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே பொதுமக்கள் போலியான மருந்துகளை நம்பி ஏமாற வேண்டாம். விற்பனை செய்யப்படும் மருந்துகளில், அவை குறித்த விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தால் அவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

அதுபோல போலி மருத்துவா்களையும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்ததாக கூறிக் கொண்டு, பாரம்பரிய வைத்தியம், நாட்டு மருத்துவம், வா்மக்கலை, யோகா மருத்துவம், என பல்வேறு மருத்துவா்கள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல போலி மருந்துகள் அல்லது போலி மருத்துவா் எனத் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கோ அல்லது திருச்சி தலைமை மருத்துவ மனையில் இயங்கி வரும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கோ புகாா் தெரிவிக்கலாம். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், சித்த மருத்துவப் பிரிவு, அரசு பொது மருத்துவமனை, புத்தூா், திருச்சி-17 என்ற முகவரிக்கு புகாா்களைத் தெரிவிக்கலாம். புகாா் செய்பவா் குறித்து ரகசியம் காக்கப்படும். புகாா் குறித்து ஆய்வு மேற்கொண்டு, போலி மருத்துவா் என்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலிகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் மருத்துவமனை ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT