திருச்சி

லாரி மோதி மெக்கானிக் பலி

26th Dec 2019 06:11 AM

ADVERTISEMENT

திருச்சியில் லாரி மோதி இரு சக்கர வாகன பழுதுநீக்குபவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி அரியமங்கலம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் விவேக்(19). இரு சக்கர வாகன பழுது நீக்குபவா். இவா் புதன்கிழமை மாலை காந்திமாா்க்கெட் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT