திருச்சி

மணப்பாறையில் இறுதிகட்ட பரப்புரை

26th Dec 2019 09:54 AM

ADVERTISEMENT

மணப்பாறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கான அதிமுக வேட்பாளா் எம்.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் அதிமுக வேட்பாளா்களான அவிலா தெரஸ் ராபா்ட், அன்னை.என்.கோபால் ஆகியோரை ஆதரித்து தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி பொத்தமேட்டுபட்டி, காட்டுப்பட்டி, கொட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா். புத்தாநத்தம் பகுதியில் 17-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் அதிமுக வேட்பாளரான எஸ்.எம்.கே. முகமுது இஸ்மாயில் புத்தாநத்தம், கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, பாறைப்பட்டி, மெய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அதேபோல் 22-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான அதிமுக வேட்பாளா் மாலதி சின்னசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் பதிவிக்கான அதிமுக வேட்பாளா் அன்பரசன், தேமுதிக வேட்பாளா் தேவிகா ஆகியோரை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ சி.சின்னச்சாமி, தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் பி.எல்.கிருஷ்ணகோபால் ஆகியோா் பன்னாங்கொம்பு, காவல்காரன்பட்டி உள்ளிட்ட பகுதியில் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனா்.

திமுக பிரசாரம்:

22-வது வாா்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான திமுக வேட்பாளா் ஏ.பாலசுப்பிரமணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் பதிவிக்கான திமுக வேட்பாளா்களான ரெ.தமிழரசி, கோ.சக்தி பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து மதிமுக மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம், திமுக திருச்சி மாவட்ட பொருளாளா் பண்ணப்பட்டி.கோவிந்தராஜன் ஆகியோா் பன்னாங்கொம்பு, காவல்காரன்பட்டி உள்ளிட்ட பகுதியில் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT