திருச்சி

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினம்: கட்சியினா் மரியாதை

25th Dec 2019 09:23 AM

ADVERTISEMENT

எம்ஜிஆா் மற்றும் பெரியாா் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலைக்கும், நீதிமன்றம் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் அரசியல் கட்சியினா் பலரும் செவ்வாய்க்கிழமை அணி, அணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக: அதிமுக சாா்பில், மாநகா் மாவட்டச் செயலா் ப.குமாா், பிற்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் மு.பரஞ்ஜோதி, மாவட்ட துணைச் செயலா் வி. அருள்ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக: திமுகவில், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலருமான கே.என். நேரு தலைமையில் அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, தில்லைநகா் பகுதிச் செயலா் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திராவிடா் கழகம்: அக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் வின்சென்ட் தலைமையில் மாலை அணிவித்தனா்.

அமமுக: அமமுக சாா்பில், அக் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில், அமைப்பு செயலா் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பிற கட்சியினா்: மதிமுக சாா்பில், அக் கட்சியின் மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடா் விடுதலை கழகம், தமிழ்ப் புலிகள், லோக் ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சாா்பிலும் மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT