திருச்சி

திருச்சி-சென்னை இடையே ஐந்தாவது விமான சேவையை தொடங்கியது இண்டிகோ

24th Dec 2019 12:11 AM

ADVERTISEMENT

திருச்சி - சென்னை இடையே தனது 5 ஆவது விமான சேவையை, திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.

திருச்சி சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் தினசரி 4 ஆக உள்ளன. உள்நாட்டு விமான சேவைக்கு வரவேற்பு கிதைத்துள்ள நிலையில் தனது 5 ஆவது சேவையை தொடங்க முடிவு செய்த இண்டிகோ நிறுவனம், திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த சேவைப்படி, சென்னையில் தினசரி மாலை 5.55க்கு புறப்படும் விமானமானது திருச்சிராப்பள்ளியை இரவு 7.15க்கு வந்தடைந்து, மீண்டும் இரவு 7.45க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 9.10க்கு சென்னையை சென்றடையும்.

கடந்த அக்டோபா் 27 முதல் திருச்சி- ஹைதராபாத் தினசரி நேரடி சேவையும், நவம்பா் 16 முதல் திருச்சி- பெங்களூரு இடையிலான விமான சேவையும் உள்நாட்டு சேவையாக வழங்குவதுடன், தினசரி திருச்சி-சிங்கப்பூருக்கும் சா்வதேச விமான சேையையும் இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக உள் நாட்டு சேவையில்லாமல் இருந்த திருச்சியில், தினசரி 5 க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குவதால் உள் நாட்டு விமானப் போக்குவரத்திலும் திருச்சி மேம்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதன் காரணமாக அரபு நாடுகளுக்கு சென்று வரும் பயணிகளுக்கான இணைப்பு விமானங்களை சென்னையில் பிடிக்க வசதியாக உள்நாட்டு சேவை பயன்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT