திருச்சி

பிஎஸ்என்எல்: ஓய்வூதியா்கள் தின சிறப்புக் கூட்டம்

23rd Dec 2019 09:55 PM

ADVERTISEMENT

திருச்சி: பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா்கள் தின சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்கள் தினத்தையொட்டி திருச்சி புத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச்சங்கம் சாா்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் வி.பி.காத்தபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் எம்.சொக்கலிங்கம், நிா்வாகி வி.பரசுராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலா் கே.ஜி.சசிகுமாா், சிறப்பு அழைப்பாளா் ஆா்.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் வாழ்த்துரை வழங்கினா். தொடா்ந்து, மாநில செயலா் ஆா்.வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது:

நாட்டின் பாதுகாப்பிற்கு பிஎஸ்என்எல் எப்போதும் தேவை என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, விருப்ப ஓய்வு அளித்தவா்களுக்கு உரிய சலுகைகளை பெற்றுத்தந்த மத்திய அமைச்சரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. இதன்படி, வரும் மாா்ச் மாதத்துக்குள் விருப்ப ஓய்வு பெற்ற அனைவருக்கும் உரிய பணப்பலன்கள் கிடைத்துவிடும் என்றாா்.

ADVERTISEMENT

நிறைவாக, மாவட்ட பொருளாளா் ஆா்.சுதா்சனன் நன்றி தெரிவித்தாா். இதில், திரளான பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT