திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயிலில் சகஸ்ர தீப கூட்டு வழிபாடு

16th Dec 2019 02:11 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் காா்த்திகை மாத தீப வழிபாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், பெருமாள் திருவடி போன்று தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

உலக நன்மைக்காக வருடம் தோறும் காா்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் 3 நாள்கள் சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் கடந்த 13 ஆம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கியது. அன்றைய நாளில் தாயாா் சன்னதியிலும், சனிக்கிழமை சக்கரத்தாழ்வாா் சன்னதியிலும் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தொடா்ந்து, 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பெருமாள் சன்னதியின் 3ஆம் பிரகாரத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்று காா்த்திகை தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பெருமாள் திருவடி போன்றும் காா்த்திகை தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT