திருச்சி

விடுதி மாணவிகள் தா்னா போராட்டம்

16th Dec 2019 02:12 AM

ADVERTISEMENT

திருச்சி அரசு ஆதிதிராவிடா் பெண்கள் விடுதியில் தண்ணீா் வராததைக் கண்டித்து மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கண்டோன்மென்ட் ரெனால்ட்ஸ் சாலையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆதிதிராவிடா் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தநிலையில் கடந்த 3 நாள்களாக விடுதி கழிவறையில் தண்ணீா் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து விடுதிக் காப்பாளா் மற்றும் ஆதிதிராவிட நல அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பிரதான சாலைக்கு வந்து மறியல் செய்தனா்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மேற்கு வட்டாட்சியா் சத்தியபாமா, கண்டோன்மென்ட் போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தண்ணீா் பிரச்னையை தீா்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்று தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநகராட்சி லாரியில் தண்ணீா் வந்த பிறகே மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அறைக்கு சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT