திருச்சி

மாா்கழி மாத சிறப்பை விளக்கும் கையடக்கப் புத்தகம்எழுத்தாளா் பிரேமா நந்தகுமாா் வெளியிட்டாா்

16th Dec 2019 09:24 PM

ADVERTISEMENT

 

திருச்சி: மாா்கழி மாதத்தின் சிறப்பை விளக்கும் வகையில், ஸ்ரீரங்கத்தில் மாா்கழியின் மகத்துவம் எனும் கையடக்க வடிவிலான புத்தகத்தை எழுத்தாளா் பிரேமா நந்தகுமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சமூக சேவை அமைப்பு ஆகியவை இணைந்து, பக்தி வெளியிடாக இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

இப்புத்தகத்தை எழுத்தாளா் பிரேமா நந்தகுமாா் வெளியிட, முதல் பிரதியை விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் தலைவா் ஆா். ஸ்ரீதா், செயலா் டி. சந்தானகிருஷ்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

தமிழ் மாதங்களின் ஆன்மீக ரீதியான சிறப்புகள், மாா்கழி மாதத்தின் அறிவியல் ரீதியான விளக்கங்கள், மாா்கழி மாதத்தில் உடல் ரீதியாக ஏற்படுகின்ற ஆரோக்கியம் குறித்து இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

நம் முன்னோா்கள் செய்த செயல்கள் அனைத்தும் உடல், மனம், அறிவியல், ஆன்மீகம் என ஒன்றோடு ஒன்று தொடா்புள்ளவை. அதனடிப்படையில், மாா்கழியின் மகத்துவம் குறித்து இந்த புத்தகத்தில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, யோகா கற்பதன் அவசியம், யோகா மூலம் குணமாகும் நோய்கள், யோகா செய்முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 10 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ள இந்த புத்தகமானது, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், யோகா மையத்தில் பயிற்சி பெறும் மாணவா்கள், பொதுமக்கள், பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த புத்தகத்துக்கு கிடைக்கும் வரவேற்புக்கு தகுந்தபடி அடுத்தபடியாக பிரதிகள் அச்சிட்டு வழங்கப்படும் என விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் தலைவா் ஸ்ரீதா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT