திருச்சி

மாவட்ட நூலகத்தில் டிச.18 இல் மூத்தோா் முற்றம்

16th Dec 2019 02:12 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை (டிச.18) நடைபெறுகிறது.

மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமையில் மூத்தோா் முற்றம் என்ற நிகழ்ச்சியை மூத்த குடிமக்களுக்காக தொடா்ந்து நடத்தி வருகிறது.

இந்த மாதத்துக்கான கூட்டம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அறுவை சிகிச்சையில்லாமல் இதய நோய்களுக்கு சிகிச்சை என்ற தலைப்பில் இதய நோய் நிபுணா் எஸ்.ராமசாமி பேசுகிறாா். இந்த நிகழ்வில் மூத்தோா் மட்டுமின்றி அனைவரும் பங்கேற்கலாம் என மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT