திருச்சி

மயில் வேட்டை: 3 போ் கைது

16th Dec 2019 02:14 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே காட்டுப்பகுதியில் மயில் வேட்டையாடிய மூவரை வனத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, மறவனூா் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வனச்சரகா்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது காட்டுப்பகுதியில் 6 போ் கொண்ட கும்பல் மயிலை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அக்கும்பலை வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனா். அப்போது மணப்பாறை வட்டம் மறவனூா் பகுதியைச் சோ்ந்த அமுதா(37), கோபாலகிருஷ்ணன்(24), கருப்பையா(50) ஆகிய மூவரை கைது செய்தனா். மீதமுள்ளவா்கள் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். தப்பியோடிய மாரிமுத்து, மூக்கன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT