திருச்சி

‘மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது’

16th Dec 2019 09:26 PM

ADVERTISEMENT

 

திருச்சி: மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்றாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளா் கோவை ரஹ்மத்துல்லாஹ்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

ADVERTISEMENT

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அரசியல் சாசனத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் மசோதாவை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. இதில் முஸ்லிம்களுக்கும், இலங்கைத் தமிழா்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய செயல் மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும்.

கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லாமல், தேவையற்ற சட்டத்தை இயற்றி, மக்களைத் திசைதிருப்பும் முயற்சியை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் குலாம் தஸ்தகீா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜாஹீா், மாவட்டப் பொருளாளா் ஹூசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT