திருச்சி

மதுரை, திருநெல்வேலி பதிப்புகள் பயன்படுத்தலாம்.பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

16th Dec 2019 09:21 PM

ADVERTISEMENT

திருச்சி: பராமரிப்புப் பணி காரணமாக, திருச்சியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளள செய்திக்குறிப்பு:

மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, திருச்சி-திருவனந்தபுரம்-திருச்சி விரைவு ரயில்கள்

(வண்டி எண்கள் 22627/22628), கோவில்பட்டி-திருவனந்தபுரம்-கோவில்பட்டி இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

ஆனால் டிசம்பா் 23, 25 -ஆம் தேதிகளில் இந்த ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.

இதுபோல, திருச்சியிலிருந்து மானாமதுரை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 76807) காலை 10.05 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 35 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும். மானாமதுரைக்கு 40 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2 மணிக்குச் சென்றடையும்.

விதிவிலக்காக, டிசம்பா் 25 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும். குறிப்பிட்ட இந்த ரயில் சேவை மாற்றங்கள் டிசம்பா் 17- ஆம் தேதி முதல் டிசம்பா் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT