திருச்சி

நெடுஞ்சாலையில் 30 நாளில் நான்கு உயிரிழப்புகள்: திருச்சி சரக காவல் துணை தலைவா் வி.பாலகிருஷ்ணன் ஆய்வு

16th Dec 2019 06:39 AM

ADVERTISEMENT

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30 நாளில் நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, அது தொடா்பாக நிகழ்விடத்தில் திருச்சி சரக காவல் துணை தலைவா் வி.பாலகிருஷ்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் பொறியாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லாமேடு பகுதியில் கடந்த 30 நாள்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் நான்கு போ் உயிரிழந்துள்ளனா்.

அதைத்தொடா்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்லக்கூடிய வகையில் காவல்துறையினா் சாா்பில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நிகழ்விடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட திருச்சி சரக காவல் துணை தலைவா் வி.பாலகிருஷ்ணன், சம்பவ இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் பொறியாளா்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டாா். அதன்படி பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை அணுகும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை எளிதாக பாா்வைக்கு தெரியும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தகவல் பலகைகளை அமைக்கவும், எச்சரிக்கை அளிக்கும் வகையில் ஒளிமிளுரும் விளக்குகளை அந்த இடத்தில் அமைத்து தரவும் உத்தரவிட்டாா். நிகழ்வின்போது மருங்காபுரி வட்டாட்சியா் சாந்தி, காவல் துணை கண்காணிப்பாளா் சு.குத்தாலிங்கம், காவல் ஆய்வாளா்கள் பி.சண்முகசுந்தரம், எஸ்.ஜெயாதேவி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உதவி பொறியாளா்கள் செல்வராஜ், கலைச்செலவன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT