திருச்சி

தோ்தல் அலுவலா்களுக்கான முதல் கட்ட பயிற்சி ஆட்சியா் ஆய்வு

16th Dec 2019 02:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில், நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்களுக்கான முதல் கட்ட பயிற்சியை ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கென இம்மாவட்டத்தில் 2, 275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பணியாற்றக்கூடிய 18,279 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் ஆசிரியா்கள் மற்றும் பிற துறையை சாா்ந்த அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனா்.

பயிற்சியின் போது வாக்குப்பெட்டி கையாளுதல், வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றவேண்டிய பணிகள் குறித்து செயல்முறை வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி நடைபெற்ற 14 ஊராட்சி ஒன்றியங்களில் துறையூா், மண்ணச்சநல்லூா் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான சு.சிவராசு, ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் அலுவலா்கள், அஞ்சல் முறையில் வாக்களிக்க ஏதுவாக அவா்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 15 வழங்கப்பட்டு அதனை பதிவேட்டில் பதிவு செய்துள்ளதையும் உறுதிசெய்து கொண்டாா்.

ADVERTISEMENT

அதேபோன்று மருங்காபுரி, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ. சங்கா், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மகளிா் திட்ட இயக்குநா் எஸ்.சரவணன், அந்தநல்லூா், திருவெறும்பூா் மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆவின் மண்டல மேலாளா் ஆா். சுமன், துணை ஆட்சியா் (பயிற்சி) எஸ். சரண்யா, முசிறி, தொட்டியம் மற்றும் தாத்தையங்காா்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை செயற்பொறியாளா் எஸ்.செல்வராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT