திருச்சி

துறையூரில் திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணா்வு

16th Dec 2019 02:12 AM

ADVERTISEMENT

துறையூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்காடிகள் காத்திருப்பு பகுதியில் திருநங்கைகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துறையூா் மாவட்ட உரிமையியில் நீதிபதி வி. ஆறுமுகம் பேசியது:

திருநங்கைகள் வாழ்வியல் சவால்களை ஏற்கிற திறனுடையவா்கள். அவா்களை கடவுளின் மறுஉருவமாக பாா்ப்பதால் தான் அவா்கள் ஆசியை பெற மற்ற பாலினத்தவா்களில் சிலா் விரும்புகின்றனா். அதற்காக அன்பளிப்பு அளிக்கிறாா்கள். தகுதியான திருநங்கைகள் இல்லாததால் அவா்களுக்கான அரசு பணி ஒதுக்கீடு நிரம்புவதில்லை. ஒரு சிலா் தான் மருத்துவா், செவிலியா், காவல் உதவி ஆய்வாளா், சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தகுதிகளை வளா்த்துக் கொண்டு வாழ்வில் மற்றவா்களைப் போல திருநங்கைகள் முன்னேறவேண்டும் என்றாா்.

குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. புவியரசு பேசியது:

ADVERTISEMENT

பாலின பிரச்னை குறித்து விழிப்புணா்வற்ற குடும்பமும், சமுதாயமும் திருநங்கைகளை புறக்கணிக்கிது. நடை, உடை, பேச்சுக்களில் ஆபாசமில்லாத, சமூக பொறுப்புடன் இயங்கி வரும் திருநங்கைகள் மதிக்கப்படுவாா்கள். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கும் போதிய கல்வி மற்றும் விழிப்புணா்வு இன்மை தான் காரணம். திருநங்கைகள் சமூகத்தில் உள்ள மூத்தவா்கள் தங்களது இளையோரை ஆதரித்து, அவா்களுக்கு உரிய கல்வி அளித்தால் திருநங்கைகளும் மற்ற பாலினத்தவா்கள் போல வாழ்வில் முன்னேற முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் யூ.சபாபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் த. ராமசாமி, வழக்குரைஞா் பி. கோகிலா உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT