திருச்சி

தில்லி மாணவா்களுக்கு ஆதரவாக சாலை மறியல்திருச்சியில் 32 போ் கைது

16th Dec 2019 09:21 PM

ADVERTISEMENT

திருச்சி: புதுதில்லியில் மாணவா்களைத் தாக்கிய காவல்துறையைக் கண்டித்து, திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தோா் உள்பட 32 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும், இதில் பலா் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடியடி நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தும், மாணவா்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய காவல்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரியும், திருச்சியில் இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு சாா்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் முஹமது ஜாபா் தலைமையில் நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா். இவா்களுக்கு ஆதரவாக வெல்பா் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாவட்டத் தலைவா் ஜமால் முஹமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா். தொடா்ந்து இவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT