திருச்சி

தியாகி அருணாசலம் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவிப்பு

16th Dec 2019 02:12 AM

ADVERTISEMENT

தியாகி அருணாசலம் பிறந்த தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

பெருந்தலைவா் காமராஜரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தியாகியுமான அருணாசலம் பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தியாகி அருணாசலம் பேரவை சாா்பில் முன்னாள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் மா.சரவணன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் கிறிஸ்டோபா், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் ஜவகா், கோவிந்தராஜன், கலை, முன்னாள் மாவட்ட தலைவா்கள் தொட்டியம் சரவணன், செல்லப்பன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT