திருச்சி

தவிா்க்க இயலாத சூழல்: தோ்தல் பணியிலிருந்துஆசிரியா்களுக்கு விலக்கு தேவை

16th Dec 2019 09:19 PM

ADVERTISEMENT

திருச்சி: தவிா்க்க இயலாத சூழலி இருக்கும் ஆசிரியா்களுக்கு, உள்ளாட்சித் தோ்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இக்கூட்டணியின் மாநிலத் துணைத்தலைவரும், மாவட்டச் செயலருமான சே.நீலகண்டன், மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் ஆசிரியா்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணி ஆண்டு முழுவதும் பாா்க்கக்கூடியதாக உள்ளது. தோ்தல் பணி கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால், ஆசிரியா்கள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.

ஆசிரியா்கள் கல்வி தரத்தை உயா்த்திக்கொள்ள அஞ்சல்வழிக் கல்வி மூலம் உயா்கல்விப் பயின்று வருகின்றனா். டிசம்பா் மாதம் பல்கலைக்கழகத் தோ்வு நடைபெறுவதால் உயா்கல்வி பயில்வோா் பாதிக்கப்படுவா். கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத்திறனுடைய ஆசிரியா்கள், தீராத நோய் உடையோா், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோா், மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியா்களுக்கு உள்ளாட்சி தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும்.

ADVERTISEMENT

அதோடு, பெண் ஆசிரியா்களுக்கு உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏதேனும் ஒரு கட்ட தோ்தல் பணியை மட்டும் வழங்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT