திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணைச் சாலையிலுள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், டிசம்பா் 19,20-ஆம் தேதிகளில் இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
வெள்ளாடு, செம்மறியாட்டு இனங்கள், தரமான ஆடுகளைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, இனவிருத்தி முறை, தீவன மேலாண்மை, கன்றுப் பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள்
வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்.
பங்கேற்க விருப்பம் உள்ளோா் 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் அல்லது பயிற்சித் தொடங்கும் நாளன்று காலை 10 மணிக்கு நேரில் வரலாம் என மையத் தலைவா் பி.என்.ரிச்சா்டு ஜகதீசன் தெரிவித்துள்ளாா்.
ADVERTISEMENT